10. கண்ணப்ப நாயனார்

அமைவிடம் : temple icon.kannappar
வரிசை எண் : 10
இறைவன்: காளத்திநாதர்
இறைவி : ஞானப்பூங்கோதை
தலமரம் : மகிழம்
தீர்த்தம் : பொன்முகலி
குலம் : வேட்டுவர்
அவதாரத் தலம் : உடுப்பூர்
முக்தி தலம் : திருக்காளத்தி
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : தை - மிருகசிரீடம்
வரலாறு : ஆந்திர மாநிலத்தில் உடுப்பூர் என்னும் தலத்தில் வேடர் குலத்தில் திருஅவதாரம் செய்கிறார் திண்ணனார். தன் நண்பர்களான நாணன், காடன் என்பவர்களோடு காட்டில் வேட்டையாட செல்கிறார் ஒருநாள். பன்றி ஒன்றைப் பின் தொடர்ந்து சென்றபோது அருகே மலையுச்சியின் மேல் கோயில் கொண்டிருந்த குடுமித்தேவர் என்ற இறைவனைக் காண்கிறார். அவர் மேல் ஆராத அன்பு கொண்டு அவரைப் பிரிய மனமில்லாமல் கூடவே இருக்கிறார். இறைவருக்கு பன்றி இறைச்சியை எடுத்துக்கொண்டும் நீராட்டுவதற்கு பொன்முகலி ஆற்றின் நீரை வாயில் முகந்து கொண்டும் வந்து இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வித்துப் படைக்கிறார். இரவில் விலங்குகளால் தீங்கு நேரக்கூடாது என்று காவல் இருக்கிறார். மறுநாள் காலை மீண்டும் உணவு கொண்டு வர மலையை விட்டுக் கீழிறங்குகிறார். அப்போது சிவாசாரியார் இறைவனுக்கு அபிடேகம் செய்ய வந்து அங்கே இருந்த அனுசிதங்களையெல்லாம் கண்டு அதிர்ச்சி அடைந்தார். நிகழ்ந்தவற்றையெல்லாம் இறைவன் அவருடைய கனவில் சொல்லி திண்ணனுடைய அன்பை நீ நாளை மறைந்திருந்து காண்பாயாக என்று கூறுகிறார். அங்ஙனமே மறுநாள் சிவாசாரியார் பார்க்கும்போது திண்ணனார் காண இறைவன் தன் ஒரு கண்ணில் உதிரம் வர காட்சியளிக்கிறார். அதனைக் கண்ட திண்ணனார் பதறிப் பல்வகையானும் சிந்தித்து அதற்கு மருந்து ஊனுக்கு ஊனே என்று தெளிந்து தன் கண்ணை இடந்து இறைவன் கண்ணில் அப்புகிறார். உதிரம் நிற்கிறது. அவருடைய அன்பின் திறத்தை மேலும் காட்டுவான் வேண்டி இறைவன் தன் மற்றொரு கண்ணிலும் உதிரம் வரக்காட்டுகிறார். திண்ணனார் சற்றும் தளராது மருந்து கைக்கண்டேன் என்று ஆர்ப்பரித்துத் தன் ஒரு காலை இறைவனின் உதிரம் வரும் கண்ணில் வைத்துக்கொண்டு, தனது இன்னொரு கண்ணையும் இடந்து எடுக்க முற்படுகையில் இறைவன் நில்லு கண்ணப்ப என்று தடுத்து ஆட்கொள்கிறார். தன் அருகில் நிற்கும் பேற்றையும் அளிக்கிறார். கண்ட சிவாசாரியார் மெய்சிலிர்த்துப் போகிறார்.
முகவரி : அருள்மிகு. திருக்காளத்தீஸ்வரர் திருக்கோயில், காளத்தி – 517644 சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : ?

இருப்பிட வரைபடம்


அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் 
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும் 
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் 
அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார்
    	           - பெரிய புராணம் 806
பாடல் கேளுங்கள்
 அவனுடைய


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க